தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கல்முனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ச.வியாழேந்திரன் கல்முனை முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர் கி.லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மகசின் சிறையில் ஒன்பதாவது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் கனகசபை தேவதாசன் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாக தெரியவருகின்றது
இவரைப் பார்வையிடுவதற்காக தேசிய சகவாழ்வு சமூக முன்னேற்ற அரசகரும மொழிகள் மற்றும் இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment