முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கூறியிருந்த நிலையிலேயே, அவர் இவ்வாறு சுகயீனமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நேற்று உத்தரவிடப்பட்டிருந்தது.
சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment