வாரணம் ஆயிரம், வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. திருமணமான இவர் கர்ப்பமாக இருந்தார். நிறைமாத கர்ப்பமாக இருக்கும்போதும் கவர்ச்சி படங்களை எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த சமீரா ரெட்டி மும்பையில் உள்ள பீம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் நேற்று பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்நிலையில் சமீரா தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, மகள் பிறந்த சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment