அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல், ஒன்பது நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அடுத்தவருடம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது அமர்வில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அவர், ஜூலை 18ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார்.
கொழும்பு, வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளுக்கு அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், நீதித்துறை, ஊடகத்துறை, சிவில் சமூக குழுக்கள், மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment