வஞ்சனை மிக்க முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கையேந்தும் அரசியல் தலைமைகளை இனியும் இந்த நாட்டுக்கு நியமித்துக் கொள்ளாதிருப்போம் என பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
குருணாகலையில் விமல் வீரவங்ச எம்.பி.யினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வஹாப் வாதத்துக்கு எதிரான தொடர் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தேரர் இதனைக் கூறினார்.
குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களை பதவி விலகுமாறு கூறியவுடன் அனைத்து எம்.பி.களும் பதவி விலகுகின்றார்கள். இதனால், குறித்த குற்றச்சாட்டுக்கு அத்தனைபேரும் பொருப்பாக மாறுகின்றார்கள். இவர்கள் குறித்து எதிர்காலத்தில் மக்கள் கவனமாக இருப்பது மட்டுமல்லாது, தீர்மானங்களையும் எடுக்க வேண்டும் எனவும் தேரர் குறிப்பிட்டார்.
கூட்டத்தின் தலைப்பு வஹாப் வாதத்துக்கு எதிரான பிரச்சாரம் என்று இருப்பினும், பேசப்படும் அத்தனை விடயங்களும் அரசியல் கட்சியொன்றைச் சார்ந்ததாக இருப்பது என்பது சாதாரண பொது மகனுக்கும் விளங்க முடியுமான ஒன்று என்பது நடுநிலையாக பார்க்கும் அனைவருக்கும் புரிந்து கொள்ள முடியுமான ஓர் அம்சமாகும்.
0 comments:
Post a Comment