கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை மேற்கொள்வோர் மத்தியில் சென்ற இரண்டு முஸ்லிம் நபர்களை ஊடகவியலாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவரில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வியால காட்டுப்பகுதியில் நேற்று அப்பகுதியால் கால்நடையாக யாத்திரைக்குச் சென்ற ஊடகவியலாளர்களிடம் சந்தேகநபர்கள் குறித்து பெண்ணொருவர் கூறியுள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் மூவர் குறித்த இருவரிடமும் சென்று விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியுள்ளனர்.
அத்துடன் அவர்களிடம் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை கோரியபோதிலும் அவர்களிடம் எதுவும் இருக்கவில்லையென்றும் அவர்கள் பாதையாத்திரிகர்களுடன் ஏன் வந்தார்கள் என்பது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லையெனவும் அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து சந்தேகநபர்கள் குறித்து வியாலையில் உள்ள படையினருக்கு அறிவித்து, அவர்களிடம் சந்தேகநபர்களை ஒப்படைத்ததாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் சம்பவம் தொடர்பாக பொலிஸ் தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment