கொன்சர்வேற்றிவ் தலைமைத்துவ போட்டியின் முன்னாள் போட்டியாளரான சாஜித் ஜாவிட் தனது ஆதரவை பொரிஸ் ஜோன்சனுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சரான ஜாவிட் கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைத்துவ போட்டியின் நான்காவதுகட்ட வாக்கெடுப்பின்போது மிகக்குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார்.
பிரெக்ஸிற்றை வழங்குவதற்கும் நாட்டை ஒன்றிணைப்பதற்கும் போட்டியாளரான ஜெரமி ஹண்டை விட ஜோன்சன் சிறந்த நிலையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எஞ்சியுள்ள இரு போட்டியாளர்களில் யாருக்கு தனது ஆதரவு என்பதை வெளியிட்டுள்ள ஜாவிட்,
எனக்கு ஜெரமி மீது மிகுந்த மரியாதை உண்டு, ஆனால் இந்த முக்கியமான நேரத்தில் எமக்கு வேண்டியதை வழங்க பொரிஸ் சிறந்தவர் என்று நான் நம்புகிறேன். நாட்டிற்கு இப்போது உள்ள முக்கியமான சவால் பிரெக்ஸிற்றை வழங்குவதாகும்.
பொரிஸைப் போலவே, நானும் எங்கள் எதிர்காலம் குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பிரித்தானியாவின் சமூக மற்றும் பொருளாதார பலங்கள் மாறவில்லை.
பொரிஸ் பிரெக்ஸிற்றை வழங்குவார் எனவும் நாட்டை ஒன்றிணைப்பார் எனவும் ஜெரமி கோர்பினை தோற்கடிப்பார் எனவும் நான் நம்புகிறேன். அதனாலதான் நான் அவருக்கு ஆதரவளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment