பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டதற்கு மக்கள் அளித்த வாக்குகள் மட்டுமே காரணம் இல்லை, மற்றொரு பெரிய காரணம் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டது பற்றி தான் ஊரே பேச்சாக இருக்கிறது.
இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என ஆளாளுக்கு பேசி வருகிறார்கள். ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஹவுஸ்மேட்ஸ்க்கு கூட அதே சந்தேகம் தான். ஒருவேளை சீக்ரெட் ரூம் மூலம் மீண்டும் வனிதா வந்தாலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் உள்ளது. வனிதா வெளியேற்றப்பட முக்கிய காரணமாக கூறப்பட்டது, கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் அவருக்கு தான் குறைந்த வாக்குகள் கிடைத்தன என்பதே. அது உண்மையாகவும் இருக்கலாம். ஏனெனில் சண்டைக்கோழியாக வனிதா வலம் வந்தது யாருக்கும் பிடிக்கவில்லை என்பது நிதர்சனம்.
ஆனால் அது மட்டுமே காரணமா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கும். காரணம் வனிதா மீது பதியப்பட்டுள்ள வழக்குகள். இதுபற்றி சட்ட நிபுணர்களிடம் விசாரித்தோம். அவர்களும் அதையே தான் குறிப்பிடுகிறார்கள். அதாவது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் ஒரு நபரை அதிக நாட்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க முடியாது என வழக்கறிஞர் ஒருவர் உறுதியாக கூறினார்.
0 comments:
Post a Comment