இந்த நாட்டின் பௌத்த தேரர்கள் தொடர்பில் நான் வெளியிட்ட தகவல்கள், பௌத்தத்தை சரியாக பின்பற்றும் மகா சங்கத்தினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் மாத்திரம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன் என இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.
அஸ்கிரிய பீடம் விடுத்த அழைப்பின் பேரில் ரஞ்ஜன் ராமநாயக்க நேற்று கண்டியிலுள்ள அஸ்கிரிய மகா விகாரைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போதே அவர் தேரர்களிடம் இதனைக் கூறியுள்ளார்.
எனக்கு அஸ்கிரிய மகா நாயக்கர் உபதேசங்களையும், ஆலோசனைகளையும் வழங்கினார். அவற்றை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இதுபோன்ற பிரச்சினைகளை முன்வைக்க வேண்டிய, கையாள வேண்டிய வழி முறைகள் குறித்து விளக்கப்படுத்தினார்கள். அதனையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
நான் ஆரம்பம் முதல் எனது அறிவிப்பில், பௌத்த கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் மகா சங்கத்தினரைத் தவிர என்றே கூறிவந்தேன். சிறு குழுவொன்றே இதற்குச் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்கள் பற்றியே நான் குறிப்பிட்டேன். இதன்பிறகு இவர்கள் பற்றியும் நான் சர்ச்சைப்பட்டுக் கொள்ள மாட்டேன் எனக் கூறினேன் எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment