அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரெடி மேக்(57). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இது குறித்து போலீசாருக்கு மேக்கின் நண்பர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
புகார் கொடுத்த நாள் முதல் டெக்சாஸ் போலீசார் மேக் குறித்து அவரது நண்பர்கள், குடும்பத்தினர், மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலமும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் போலீசார் வீனஸ் எனும் பகுதிக்கு வேறொரு வழக்கு தொடர்பாக விசாரிக்க நிகழ்விடத்திற்கு சென்றுள்ளனர். அப்பகுதியில் மனிதனின் எலும்புத்துண்டுகள் கிடைத்துள்ளன. சில எலும்புத்துண்டுகளில் நாயின் முடி மற்றும் தடங்கள் இருந்துள்ளன.
மேலும் கிழிந்த ஆடைகளும் இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், மீட்கப்பட்ட எலும்புத்துண்டுகள் யாருடையதாக இருக்கும் என்பதை விசாரிக்க தொடங்கினர்.
இந்த விசாரணையில் காணாமல் போன மேக்கின் உடல்தான் அந்த எலும்புத்துண்டுகள் என தெரியவந்துள்ளது.
மேக், அவருக்கு சொந்தமான வீனஸ் பகுதிக்கு அருகே உள்ள சிறிய கிராமப்புற வீட்டில் வசித்து வந்தார். 18 நாய்களை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். மேக் எங்கு சென்றாலும் தன்னுடன் நாய்களை ஒவ்வொன்றாக கொண்டு செல்வது வழக்கம்.
நாய்களை செல்லமாக பார்த்துக் கொள்வதுடன், அவற்றை நண்பர்களாகவே பாவித்து கவனித்து வந்துள்ளார். நாய்களுடன் விளையாடுவது, உரையாடுவது என தன் பொழுதை அவற்றுடனே கழித்து வந்துள்ளார். குடும்பத்தினரை விட செல்லப் பிராணிகள் மீதே அதிக அன்பு கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் மேக்கின் மரணம் குறித்து போலீசார் விசாரிக்கையில் இந்த நாய்கள்தான் மேக்கினை கடித்து தின்றேக் கொன்றுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
மேக்கினை கொன்ற நாய்கள், சடலம் கிடைத்த இடத்திற்கு அருகே சுற்றித்திரிந்துள்ளன. இதில் 13 நாய்கள் வெறிப்பிடித்ததன் காரணமாக கொல்லப்பட்டன. 2 நாய்கள் அந்த 13 நாய்களால் கொல்லப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment