நடிகர் தனுஷ், நேற்று முன்தினம் 36வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது ரத்ததான முகாமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் எஸ்.தாணு, இளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை தனுசுக்கு கொடுத்தார். ஆனால் அந்த பட்டம் எனக்கு வேண்டாம். தனுஷ் என்ற பெயரே போதும் என்று சொன்னார் தனுஷ். ஆனபோதும் அவரது ரசிகர்கள் அதை ஏற்கவில்லை. வரப்போகிற படங்களின் பப்ளிசிட்டி பேனர், கட்அவுட்களில் இளைய சூப்பர் ஸ்டார் இடம்பெறும் என்று குரல் கொடுத்தார்கள்.
இந்த நிலையில், பிறந்த நாளில் தன்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார் தனுஷ், இந்த கடிதத்தை என்ன வார்த்தையில் சொல்லி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை அந்த அளவுக்கு எனது பிறந்த நாளில் அன்பு பாசத்தை பொழிந்து விட்டீர்கள். உங்கள் அனைவருக்குமே எனது நெஞ்சார்ந்த நன்றி. உங்களது வாழ்த்துக்களால் எனது பிறந்தநாளை சிறந்த நாளாக உணர்ந்தேன். உங்கள் வாழ்த்து எனக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
0 comments:
Post a Comment