விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது 6 மாத குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பாட்னாவில் இருந்து டெல்லிக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்திலேயே இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.
6 மாதக் குழந்தையை அவரது பெற்றோர் விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
குழந்தைக்கு ஏற்பட்டுள்ள இதயக் கோளாறை சரிசெய்யும் பொருட்டு மேலதிக சிகிச்சைக்காக குழந்தை அழைத்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது என்று கூறப்படுகிறது.
இதையறிந்த சக பயணிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர். டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தை அடைந்ததும் குழந்தையின் உயிரிழப்புக் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
0 comments:
Post a Comment