யாழ்.வலி-வடக்கு பிரதேசத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் ஒத்துழைப்போடு விடுவிக்கப்படும் குறித்த காணிகள் வடக்கு ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
ஆளுநர் அதனை யாழ் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் முரளிதரனிடம் வழங்கினார்.
2015 ஆண்டு முதல் இன்றுவரை யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகளில் 2 ஆயிரத்து, 963 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment