ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமலாபால். இந்தநிலையில் தற்போது அந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள லிப்கிஸ் காட்சிமேலும் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் நடித்தது பற்றி அமலாபால் கூறுகையில், சமீபகாலமாக எனக்கு வந்த கதைகள் நம்பகத்தன்மை இல்லாத கதைகளாகவே இருந்தன. அதனால்தான் நடிப்பதில் ஆர்வம் குறைந்து நான் படங்களை குறைத்து வந்தேன்.
இந்தநேரத்தில் டைரக்டர் ரத்னகுமார் சொன்ன ஆடை கதை வித்தியாசமாக இருந்தது. இந்த படத்தில் நான் நடித்துள்ள நிர்வாண காட்சியில் நடிப்பதற்கு முதலில் தைரியமாக சம்மதம் சொன்னபோதும், படப்பிடிப்பு தளத்தில் படபடப்பாக இருந்தது. அந்த காட்சியை படமாக்கியபோது கேமரா, லைட்டிங் டீமில் உள்ள மொத்தம் 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் அந்த 15 பேரும் எனக்கு முழு பாதுகாப்பு கொடுத்தார்கள். அவர்கள் அப்படி பாதுகாப்பு தரவில்லை என்றால் என்னால் அந்த காட்சியில் நடித்திருக்கவே முடியாது என்கிறார் அமலாபால்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment