தமிழர் தாயகப் பகுதிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்யவுள்ளார்.
அதற்கமைய இன்று காலை திருகோணமலைக்கு பிரதமர் விஜயம் செய்யவுள்ளார்.
காணி உறுதிப்பத்திரங்களை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவே அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த நிகழ்வு திருகோணமலை மக்கேசர் மைதானத்தில் காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை இந்த நிகழ்வின் பின்னர் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள அவர், இன்று இரவு ஐக்கிய தேசியக் கட்சியினரை நட்சத்திர விடுதி ஒன்றில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் நாளை இடம்பெறவுள்ள சுன்னாகம் – கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
அதனைத்தொடர்ந்து யாழில். ஐந்தரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் கலையரங்கத்துக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டி வைக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment