கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது, கல்முனை முஸ்லிம்களின் பொருளாதாரத்தை கேள்விக் குறியாக்குமென திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளுக்கு தீர்வு வழங்காமல், பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது கல்முனையில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்கிழக்கின் முகவெற்றிலை கல்முனையாகும். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வர்த்தக பூமியாகவும் இது திகழ்கிகறது. இதனை விட்டுக்கொடுக்க முடியாது. இவ்விவகாரத்தை முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினைகளுள் ஒன்றாகக் கொண்டு சென்று நியாயமாகத் தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டமொன்று சம்மாந்துறை பத்ர் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment