கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், பெரு அணியை வீழ்த்தி பிரேஸில் அணி 9ஆவது முறையாக சம்பியனாக வாகை சூடியுள்ளது.
தென் அமெரிக்க கண்டத்து அணிக்களுக்காக நடத்தப்படும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் 46ஆவது அத்தியாயம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இத்தொடரில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், பிரேஸில் அணியும், பெரு அணியும் மோதிக்கொண்டன.
மரகானா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடின.
போட்டியின் 15ஆவது நிமிடத்தில் பிரேஸில் அணி, தனது முதல் கோலை புகுத்தி இரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது. இந்த கோலை அணியின் வீரரான எவர்டொன் சோர்ஸ் அடித்தானர்.
இதனைதொடர்ந்து பதில் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்த பெரு அணிக்கு போட்டியின் 44ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது.
இந்த பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்திய நட்சத்திர பவுலோ குரேரிரோ அதனை கோலாக மாற்றி, கோல் கணக்கை 1-1 என சமநிலைப் படுத்தினார்.
இதன்பிறகு முன்னிலை கோலை புகுத்த இரண்டு அணிகளும் முட்டி மோதிக்கொண்டன. எனினும் அந்த அதிஷ்டம் பிரேஸில் அணிக்கே கிடைத்தது.
போட்டியின் 48ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கெப்ரியஸ் ஜீஸஸ், அணிக்கு அற்புதமான கோலொன்றை பெற்றுக்கொடுத்து அணியை 2-1 என முன்னிலைப் படுத்தினார்.
0 comments:
Post a Comment