பங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றைய தினம் (26) பகல் இரவு ஆட்டமாக இப்போட்டி நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பங்களாதேஷ் அணி இன்னும் இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியுடன் விளையாடவுள்ளது.
0 comments:
Post a Comment