வட பகுதி ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாக இன்று (20) பயணிக்கவிருந்த 8 இரவு தபால் ரயில்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பொல்கஹவெல மற்றும் பொதுஹர இடையில் உள்ள ரயில் குறுக்கு வீதிகள் திருத்தப்படுவதனால் இந்த தடை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துரை, மட்டக்களப்பு, தலைமன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் இரவு நேர தபால் ரயில்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, அந்த மேற்படி ரயில் நிலையங்களிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த இரவு நேர நான்கு ரயில்களும் இன்று பயணிக்காது எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment