பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் 8 ஆம் திகதி வெளியீடு

தனது கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி வெளிடப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தையையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐந்து கட்டப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும், இதுவரையில் முக்கிய பிரச்சினைகளான ஜனாதிபதி வேட்பாளர், பிரதமர், பொதுச் சின்னம், கூட்டணிக்கான பொதுப் பெயர் என்பன தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட வில்லை.
தமது கட்சியின் தனித்துவத்தை இழந்து மஹிந்த ராஜபக்ஸவிடம் மண்டியிட முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. ஐந்தாவது கட்டப் பேச்சுவார்த்தையின் பின்னர் நடைபெற்ற கட்சியின் கிளைக் காரியாலயம் திறப்பு நிகழ்வில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment