காதல் நிரம்பி வழிந்த காலம் 1980கள் தான். செல்போன் இல்லாமல் கடிதமும், கண்களும் காதல் வளர்த்த காலம். 80களின் காதலை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்திருக்கிறது. தற்போது புதியவர்கள் இணைந்து பூவே போகாதே என்ற தலைப்பில் ஒரு காதல் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சத்யபிரமீலா தயாரித்துள்ளார். தருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக லாவண்யா நடித்துள்ளார். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு வர்கீஸ் இசை அமைத்துள்ளார். நவீன் நயனி இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:
இது 1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம் இது. முழுக்க முழுக்க நாயகன், நாயகியை சுற்றி நடக்கும் திரைக்கதை இது. கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்பட இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள்.
அந்த காலகட்டத்தில் காதலை இந்த சமூகம் எப்படி பார்த்தது என்பதை அழுத்தமாக பதிவிட்டுள்ளோம். தங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம். என்கிறார் இயக்குனர் நவீன் நயனி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment