விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாகும் படம் ‛நேர்கொண்ட பார்வை'. பிங்க் ஹிந்தி ரீ-மேக்கான இதை, வினோத் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
அஜித்துடன் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிரைலர், பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் ஆக.,10ம் தேதி வெளியாவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், முன்னதாகவே படம் வெளியாகலாம் என கூறப்பட்டது.தற்போது, ஆகஸ்ட் 8ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
அஜித்தின் சென்ட்டிமென்ட் நாளான வியாழக்கிழமையில் நேர்கொண்ட பார்வை வெளியாகிறது.
0 comments:
Post a Comment