லண்டனில் 7 மாத குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆறு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் வசித்துவரும் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர் ஷாலினா பத்மநாபா (வயது 33). இவர் பல வருடங்களாக தனது கணவருடன் சேர்ந்து கருத்தரித்தல் சிகிச்சை எடுத்துக்கொண்டதன் பலனாக ஷாகன் என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குறித்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாலும், பல்வேறு சிகிச்சைகள் தேவைப்பட்டதாலும் 4 மாதங்கள் வரை வைத்தியசாலையிலேயே இருந்தது. குழந்தை வீடு திரும்பிய பின்னரும் குழாய் மூலம் உணவு செலுத்துதல் போன்ற தனிக்கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
குழந்தைக்கு 7 மாதம் ஆன நிலையில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி உயிரிழந்தது.
பிரேத பரிசோதனையில் குழந்தையின் மண்டை ஓட்டில் 2 இடங்களில் எலும்பு முறிவும், கால்களில் எலும்பு முறிவும் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முதலில் உண்மையை மறைத்த ஷாலினா பின்னர், தனக்கு மிகவும் வலிமையான குழந்தை தான் வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதன்காரணமாகவே தான் குழந்தையை கொலை செய்ததாக இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த ஷாலினா பத்மநாபா தெரிவித்திருந்தார்.
0 comments:
Post a Comment