பௌத்த தேரர்களுக்கு அபகீத்தி ஏற்படுத்தும் வகையில் அறிவிப்புச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு எதிராக 6 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் விரைவில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பௌத்த தீவிரவாத அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்கு அவ்வமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்றிருந்தனர். இதன்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தேரர்களிடம் இதனைக் கூறினார்.
அரசாங்கம் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தாமதிக்குமாயின், இரண்டாயிரம் பிக்குகளுடன் சிறிக்கொத்த தலைமையகத்தை சுற்றிவளைப்போம் என அங்கு வருகை தந்திருந்த இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment