நைஜீரியாவில் கிராம மக்கள் மீது போக்கோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் மைட்குரி (Maiduguri) என்ற இடத்திற்கு அருகிலுள்ள புது (Budu) எனும் கிராமத்தில், உறவினர் ஒருவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த கிராம மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இருசக்கரவாகனங்களில் பயங்கர சத்தங்களை எழுப்பியவாறு வந்த தீவிரவாதிகள், கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு போர்னோ மாகாணத்திலுள்ள பெண்கள் பள்ளியிலிருந்து 276 சிறுமிகளை போக்கோஹராம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment