நிதி அமைச்சர் மங்கள சமரவீர முறைகேடாக சம்பாதித்த கொமிசன் பணத்தினால் லண்டன் நகரில் 6 வீடுகளை விலைக்கு வாங்கியுள்ளதாக சமகி பலவேகய அமைப்பின் தலைவர் நீதியாவல பாலித தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
மங்கள சமரவீர நிதி அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் 47 ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தேரர் குறிப்பிட்டார்.
இலங்கை வரலாற்றில் பொது மக்களின் சொத்துக்களை சுரண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட முக்கிய நபர்களாக மங்கள சமரவீரவும் அவரது சகாக்களும் காணப்படுவதாகவும் தேரர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment