யாழில் 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம்

கடந்த வாரத்தில் யாழ் நகரில் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ஒன்றினால் தொலைத்தொடர்பாடல் துறையில் 5G தொழில் நுட்பத்தினை இலங்கையில் அறிமுகப்படுத்தும் நோக்குடன் சிறிய தொலைத்தொடர்பு கோபுரங்களான ஸ்மார்ட் போல் (Smart pole )பலவற்றினை நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன. 
அதனைத் தொடர்ந்து வலைத்தளங்களிலும் மற்றும் ஊடகங்களிளும் இத்தொழில் நுட்பம் ஆனது உடல் நலத்திற்கு மிக்க கேடானது எனவும் சிட்டு குருவிகள் உட்பட பல்வேறு உயிரிகள் அழிவடையும் எனவும் பிரச்சாரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பான உண்மை நிலையினை வெளிக்கொணர்வதே இப்பதிவின் நோக்கமாகும்.
5G தொழில் நுட்பத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவதன் காரணம் என்ன?
தற்பொழுது உலகத்தில் மற்றும்  உள்ள பெரும்பாலான கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தமது ஸ்மார்ட் தொலை பேசியுடாக இணையத்தளத்தினை பாவிக்கின்றனர் இது தவிர பலர் கம்பியூட்டர், டேப் மற்றும் ஸ்மார்ட் டிவி  போன்ற சாதனங்களின் ஊடாகவும் இணையத்தளத்தினை பாவிக்கின்றனர். இதன் காரணமாக இணைய வேகம் குறைவடைந்துள்ளது. 
மேலும் தற்பொழுது பாவனையில் உள்ள தொழில் நுட்பத்தினால் குறைந்த நேரத்தில்  அதிக  தரவுகளை பரிமாற முடியாது, அதாவது அதிக வேகத்தில் தரவுகளை பரிமாற முடியாது. உதாரணமாக high definition (HD) வீடியோ ஒன்றினை தரவிறக்கம் செய்ய தற்பொழுது உள்ள தொழில் நுட்பத்தில் (4 LTE ) ஏறத்தாழ 10 நிமிடங்கள் செலவாகும் அதேவேளை 5G தொழில் நுட்பத்தில் ஓரிரு செக்கன்கள் போதுமானது.
 மேலும் எதிர்காலத்தில் பயன்பாட்டிற்கு வரவுள்ள சாரதியற்ற வாகனங்கள் போன்றவற்றிக்கும் மேலும் ஒன்லைன் மூலம் வீடியோ கேம் போன்றவற்றினை விளையாடவும்  இத்தொழில் நுட்பம் அவசியமானது. 
எனவேதான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G தொழில் நுட்பத்தினை அறிமுகப் படுத்துகின்றன.முதலில் 5G  தொழில் நுட்பத்திற்கும் தற்பொழுது பாவனையில் உள்ள 4LTE  தொழில்நுட்பத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை முதலில் பார்ப்போம். 
தற்பொழுது கைத்தொலைபேசிகள் 6GHz வரையிலான அதிர்வெண்ணிலேயே தொழில் படுகின்றன. அவை உண்மையிலே ரேடியோ அலைகள் ஆகும் (Radio waves ) அத்துடன் அவற்றின் அலைநீளம் 1 தொடக்கம் 10 வரையான சென்றி மீட்டர்லியே இருக்கும் . 
ஆனால் இந்த 5G தொழில் நுட்பத்தில் 60 GHz தொடக்கம் 300 GHz வரையான அதிர்வெண்ணில் தொலைத்தொடர்பு சாதனங்கள் தொழில்ப்படும், இங்கு அவற்றின் அலைநீளம் 1 தொடக்கம் 10 வரையான மில்லிமீட்டர்கள் ஆகும் (10 மில்லிமீட்டர் ஆனது 1 சென்டிமீட்டர் ஆகும்). 5G தொழில் நுட்பத்தில் பயன்படும் அலைகள் நுண் அலைகள் (micro waves) ஆகும். இனி இந்த அலைகளின் அதிர்வெண்ணிற்கும் அலைநீளத்திற்கும் மற்றும் அலைகள் கொண்டுள்ள சக்தியிற்கும் இடையிலான தொடர்பினை கீழ் வரும் இரு படங்கள் மூலம் விளங்கிக்கொள்வோம்.


இதன் பிரகாரம் 5G தொழில் நுட்பத்தில் பயன்படும் நுண் அலைகள் மிகவும் சக்தி குறைந்தவை, இவற்றினால் மனித உடலை ஊடுருவ முடியாது. மேலும் இவை அயனாக்கும் கதிரியக்க தாக்கம் (non ionizing radiation) அற்றவை இதனால்  மனித தோலினால் அகத்துறிச்சப்பட்டாலும் மனித கலங்களில் மாற்றங்களினை உண்டுபண்ணாது புற்று நோய் மற்றும் குறைந்த வயதில் அதிக வயதான தோற்றம் போன்றவற்றினையும்  உண்டு பண்ணாது. 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment