உலகளவிலான ஃபார்ச்யூன் 500 நிறுவனங்களின் பட்டியில் இந்தியாவின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் கோலோச்சும் 500 நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் 7 நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
அதில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் சென்ற ஆண்டை காட்டிலும், 42 இடங்கள் முன்னேறி 106வது இடத்தை பிடித்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
2018ம் ஆண்டில் 62.3 பில்லியன் டாலர்களாக இருந்த இந்நிறுவனத்தின் வருவாய், இந்தாண்டு 32.1 சதவிகிதம் உயர்ந்து 82.3 பில்லியன் டாலராக உள்ளது.
சென்ற ஆண்டு ஃபார்ச்யூன் 500 நிறுவனங்களின் பட்டியலில் இருந்த இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தற்போது 117வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனினும், கடந்தாண்டு 65.9 பில்லியன் டாலர்களாக இருந்த இந்நிறுவனத்தின் வருவாய், தற்போது 17.7 சதவிகிதம் உயர்ந்து 77.6 பில்லியன் டாலர்களாக உள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐ.ஒ.சி. தவிர 37 இடங்கள் முன்னேறி 160வது இடத்தை பிடித்துள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனம், 20 இடங்கள் பின்தங்கி 236வது இடத்தை பிடித்துள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, 33 இடங்கள் பின்தங்கி 265வது இடத்தை பிடித்துள்ள டாடா மோடார்ஸ், 39 இடங்கள் முன்னெறி 275 இடத்தில் பி.பி.சி.எல் மற்றும், 90 இடங்கள் பின்தள்ளி 495வது இடத்தில் உள்ள ராஜேஷ் என்ஸ்போர்ட் ஆகிய இந்திய இந்திய நிறுவனங்களும் ஃபார்ச்யூன் 500 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஃபார்ச்யூன் 500 நிறுவனங்களின் பட்டியில்ல முதலிடத்தை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்தாண்டு அதிகளவிலான அமெரிக்க நிறுவனங்கள் ஃபார்ச்யூன் 500 பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், இந்தாண்டு அதிகளவில் சீன நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
அடுத்தடுத்த இடங்களை, சீன அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சினோபெக் குழுமம், டச்சு நிறுவனமான ராயல் டச்சு ஷெல், சீனா நேஷனல் பெட்ரோலியம் மற்றும் ஸ்டேட் கிரிட் நிறுவனங்கள் பிடித்துள்ளன.
0 comments:
Post a Comment