யாழ் மாநகரசபை முதல்வரால் நடைமுறைப்படுத்தப்படும் 5G ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE) திட்டத்திற்கு எதிராக இன்று நடத்தப்பட்ட போராட்டம் சற்று முன்னர் முடிவுக்கு வந்துள்ளது.
யாழ் மாநகரசபை முதல்வரின் அலுவலக வாயிலில் போராட்டக்காரர்கள் உட்கார்ந்திருந்தபோதும், முதல்வர் ஆனோல்ட் அவர்களை சந்திக்க மறுத்ததாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் போராட்டக்காரர்கள் அலுவலகத்தினுள் உள்நுழையாதவாறு பொலிஸ் பாதுகாப்பையும் அவர் கோரியிருந்தார்.இந்நிலையில் போராட்டக்காரர்களுடன் பேசிய ஆணையாளர் த.ஜெயசீலன், இந்த ஒப்பந்தத்தில் தான் கையொப்பமிடவில்லை என தெரிவித்துள்ளார்..
தற்போது மாநகரசபை அமர்வு ஆரம்பிக்கவுள்ளதால், அதற்கு வசதியாக போராட்டம் முடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் மாநகரசபை அமர்வில் எதிர்க்கட்சிகள் 5 ஜி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமென எதிர்பார்க்கபடுகின்றது.
0 comments:
Post a Comment