காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்து இரு தினங்களுக்கு கனமழை

தமிழகத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அடுத்து இரு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
தமிழகத்தின் பல ஊர்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்து இரு தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் பாலசந்திரன், தென்மேற்கு பருவமழை இப்போது கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ளது என்றார்.
இதே நேரத்தில் தமிழகத்தின் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் சுழற்சி நிலவுவதாக கூறிய அவர், இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார். இதே காலகட்டத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். 
சென்னை மற்றும் அதன் புறநகரில் ஓரிரு முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவழை குறைந்துள்ளதாக பாலசந்திரன் தெரிவித்தார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment