சிறுபான்மையினர் மீதான தாக்குதலைத் தடுக்கக் கோரி 49 பிரபலங்கள் கடிதம் எழுதிய நிலையில், அதற்கு எதிராக 62 பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
ஜெய் ஸ்ரீராம் என்பதை ஆயுதமாக்கி போர் முழக்கமிட்டு சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக கூறி மணி ரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். இந்த நிலையில் அந்த 49 பேரும், நக்சலைட் தாக்குதல், தீவிரவாதிகள் காஷ்மீரில் பள்ளிகளைக் கொளுத்தும் போது ஏன் மவுனம் காத்தனர் என கேள்வி எழுப்பி நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட 62 பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
சர்வதேச அளவில் தேசத்தின் பெயருக்கும், பிரதமர் மோடியின் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் 49 பிரபலங்களின் கடிதம் அமைந்ததாகக் 62 பிரபலங்கள் கூறியுள்ளனர். ஜெய் ஸ்ரீராம் எனும் முழக்கமிடும் பக்தர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லையெனவும், அரசியல் சார்புடன் முந்தைய கடிதத்தில் சில பிரபலங்கள் நடந்துகொண்டதாகவும் கங்கனா ரனாவத், பிரசூன் ஜோஷி பென் உள்ளிட்ட 62 பிரபலங்கள் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு அந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
0 comments:
Post a Comment