அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்திடம் இருந்து 480 மில்லியன் டொலர் ரூபாயை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம், அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய குறித்த பத்திரம் ஜூலை 22ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உடன்பாட்டில் கையெழுத்திடுவதில் தாமதம் ஏற்பட்டால், திட்டம் சரிந்து போகவோ அல்லது வேறு இடங்களுக்கு நிதி ஒதுக்கப்படவோ மாட்டாது என, திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படும்போது, இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்பதோடு, திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை மிலேனியம் சவால் நிறுவனத்துடன் செய்துகொள்ளும் உடன்பாட்டுக்கு அமைய இலங்கைக்கு ஐந்து ஆண்டுகளில் 480 மில்லியன் டொலர் ரூபாய் கொடை அபிவிருத்தி நிதியாக கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment