48 மருந்துளின் விலை குறைப்பு

முதல் கட்டத்தின் கீழ் 48 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு விலை ஒழுங்குறுத்தலை மேற்கொண்டதன் மூலம் 3,600 ரூபாவாக இருந்த மருந்தூசியின் விலை 400 ஆல் குறைவடைந்துள்ளது.
தனியார் துறைகளில் மருந்து வகைகளின் விலைகளில் கொள்வனவு செய்வதில் பாரிய நிவாரணம் பொதுமக்களுக்குக் கிடைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பொதுமக்கள் மருந்து வகைகளைப் பயன்படுத்துவதில் ஈடுபட்டிருப்பதாகவும், மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டதனால் இறக்குமதி செலவினை 9,200 மில்லியன் ரூபாவாக குறைக்க முடிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் பொதுமக்களுக்கு வருடாந்தம் 4400 மில்லியன் ரூபா பெறுமதியான பயன்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வைத்தியசாலைகளில் நிலவிய மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டினை 2015 ஆம் ஆண்டின் பின்னர் படிப்படியாக குறைக்க முடிந்துள்ளது.
வைத்தியசாலைகள் மத்தியில் மருந்து வகைகளைப் பரிமாறுவதற்காக வகுக்கப்பட்டிருந்த நடைமுறை கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சீர்குலைந்துள்ளது. இருப்பினும் இந்நிலை வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment