சிலி நாட்டின் தெற்கு பகுதியான படகோனியா கடல் பரப்பில் கொட்டியிருக்கும் டீசலை அகற்றும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
குயரெல்லோ (Guarello) தீவிலிருந்து 150 மைல் தூரத்துக்கு பியர்டோ நட்டேல்ஸ் டவுன் வரையிலான கடல் பரப்பில், கடந்த சனிக்கிழமை 40,000 லிட்டர் டீசல் எண்ணெய் கொட்டியது.
இதுகுறித்து கேப் என்ற சுரங்க நிறுவனம் தகவல் அளித்ததை தொடர்ந்து, கடற்படையினர் கடலில் கலந்த எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுள்ளனர்.
மேலும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளின் உயிரிழப்பை தவிர்க்கும் வகையில் பணியை விரைந்து முடிக்கவும் சிலி கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கடலில் டீசல் கொட்டியது எப்படி என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment