தபால் ஊழியர்கள் சங்கம் இன்று மாலை 4.00 மணி முதல் இரண்டு நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் எடுத்துள்ளனர்.
ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள முரண்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரியே இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தபால் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு தர மறுத்தால், இப்போராட்டத்தை தொடராக முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment