திருச்சி மலைக்கோட்டை ராணி மங்கம்மாள் அருங்காட்சியகத்தில் 31 பழங்கால சிலைகளைக் கடந்த 2009ம் ஆண்டு 9 பேர் கொண்டு கும்பல் திருடிச் சென்றது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார், ஆனந்தன், சிவா, சிவசிதம்பரம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 21 சிலைகள் மீட்கப்பட்டன. மற்றவர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். இவர்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதற்கிடையில் நேபாள எல்லையில் சோனாலி பகுதியில் குற்றவாளிகளில் ஒருவரான காரைக்குடி அருகேயுள்ள பட்டினம் பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராம்குமார் என்பவர் மறைந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி விஜயகுமார் தலைமையிலான குழுவினர் ராம்குமாரை நேபாள எல்லையில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராம்குமாரை கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாதவ ராமானுஜம் வீட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை ஜூலை 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். இதையடுத்து அவரை போலீஸார் பலத்த பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
0 comments:
Post a Comment