இங்கிலாந்தில் அனல் மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குளிர்விக்கும் கோபுரம் நொடிப்பொழுதில் தரைமட்டமாக்கப்பட்டது.
வெஸ்ட் யார்க்சையர் என்ற இடத்தில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 370 அடி உயரத்திற்கு 10க்கும் மேற்பட்ட குளிர்விக்கும் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்காகவும், உள்ளூர் மக்களின் நடைபாதைக்காகவும் இதில் 6 கோபுரங்களை ஒன்றன்பின் ஒன்றாக இடிக்க அனல்மின் நிலைய நிர்வாகம் முடிவு செய்தது. அதன் முதற்கட்டமாக முதற்கோபுரம் இடிக்கப்பட்டது.
சுற்றிலும் வெடிமருந்து பொருத்தப்பட்ட அந்தக் கோபுரம் சில நொடிகளில் சரிந்து தரைமட்டமானது. மீதமுள்ள கோபுரங்கள் வரும் நாட்களில் இடிக்கப்படும் என அனல்மின் நிலையம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment