ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப்பெஸோஸ் (வயது 55). இவருக்கும் எழுத்தாளர் மாக்கென்சி (49) என்பவருக்கும் 1993-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
2017-ம் ஆண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்சை பின்னுக்கு தள்ளி ஜெப் பெஸோஸ் உலகின் முதல் பணக்காரராக மாறினார்.
ஜெப்பெஸோஸ்- மாக்கென்சி இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து செய்து கொள்ள கடந்த ஏப்ரல் மாதம் முடிவு செய்தனர். 90 நாட்களில் சொத்துக்களை பிரித்துக் கொண்டு முறைப்படி பிரிய முடிவு எடுத்தனர்.
இந்த கால அவகாசம் ஓரிரு நாட்களில் முடிய உள்ளது. அமேசான் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை மனைவி மாக்ஜென்சிக்கு கொடுக்க ஜெப்பெஸோஸ் முடிவு செய்துள்ளார்.
இதன் மூலம் அவருக்கு ரூ.2.62 லட்சம் கோடி ஜீவனாம்சம் கிடைக்கும். உலகின் மிகப்பெரிய விவாகரத்து நஷ்டஈடாக இது இருக்கும்.
இந்த ஜீவனாம்ச தொகையை பெறுவதன் மூலம் உலகின் 4-வது பணக்கார பெண்ணாக மாக்கென்சி திகழ்கிறார்.
இந்த தொகையை மனைவிக்கு வழங்கிய பிறகும் ஜெப் பெஸோஸ் சொத்து மதிப்பு ரூ.8.14 லட்சம் கோடியாக இருக்கும். உலகின் முதல் பணக்காரராகவும் அவர் தொடர்ந்து நீடிப்பார்.
இதற்கிடையே ஜீவனாம்சமாக பெறும் தொகையில் பாதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப் போவதாக மாக்கென்சி அறிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment