21 தாக்குதல் அமெரிக்கா, ஐரோப்பா என்பவற்றினால் திட்டமிடப்பட்டது

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் ஹம்பாந்தோட்ட – சீன துறைமுக ஒப்பந்தத்தின் விளைவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ள இந்த உடன்படிக்கையை நீக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த குண்டுத் தாக்குதலுக்கு இந்நாட்டிலுள்ள பயங்கரவாதிகளைப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த தாக்குதல் அமெரிக்காவினதும், ஐரோப்பிய நாடுகளினதும் ஒரு சதியே ஆகும். அந்த நாடுகள் இந்த சீன உடன்படிக்கை குறித்து அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கினால், இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும் எனவும் அந்த நாடுகள் கூறியிருந்தன.
இதனையடுத்தே இனவாத கலவரம் இந்த நாட்டில் ஏற்பட்டது. இந்த அனைத்தும் ஹம்பாந்தோட்ட உடன்படிக்கையின் பிரதிபலனாகும். இந்த உடன்படிக்கை தேசிய பாதுகாப்புக்கு ஒரு தடைக்கல்லாகும். இந்த துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்யும் போது வெளிநாட்டுக்கு இந்த நாடு செலுத்த வேண்டியிருந்த கடன் தொகை 60 பில்லியன் டொலராக காணப்பட்டது. விற்பனை செய்ததன் பின்னர் 85 பில்லியன் டொலர்களாக இந்த கடன் அதிகரித்துள்ளது. இந்த நாட்டை அழிப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இந்த நாட்டின் காணிகளை விற்பனை செய்வது ரணிலின் ஒரு பிரயத்தனம் ஆகும். மக்களின் காணிகளை கொள்ளையடிப்பது மத்திய வங்கியின் நிதி மோசடியைப் போன்று இலகுவானதல்ல என ரணிலுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் பிணையின்றி வீட்டுக்கு அனுப்புவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment