அமெரிக்காவில் ஷாப்பிங் மால் ஒன்றில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர்.
அதில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திலுள்ள பிளாண்டேஷன் நகரில் ஏற்பட்ட இந்த விபத்தில், பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறிய கட்டிட சிதைவுகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதிகளிலுள்ள கட்டடங்கள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களிலும், தூக்கி வீசப்பட்ட சிதைவுகள் துளைகளை ஏற்படுத்தியுள்ளன.
மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், இந்த வெடிப்பால் சுற்றியுள்ள கட்டிடங்களின் உறுதி பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் ஷாப்பிங் மால் கட்டிட இடிபாடுகளில் சிதைந்த எரிவாயு இணைப்பை கண்டெடுத்ததாகவும், இந்த குழாய் வெடித்ததே விபத்துக்கு காரணம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment