வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியதில் 200 வீடுகள் எரிந்து சாம்பலாகின.
இந்தச் சம்பவம் பெரு நாட்டின் தலைநகர் லிமாவில், உள்ள துறைமுக நகரமான சான் ஜூயான் போஸ்காவில் நடந்துள்ளது.
இன்று அதிகாலை திடீரென வீடு ஒன்று தீப்பற்றியது. தீ மளமளவென பரவி அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியது.
தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் மக்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்த போதிலும், விபத்தில் பிளைவுட்டில் அமைக்கப்பட்டிருந்த வீடுகள் அனைத்தும் சாம்பலாகின.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment