20 பேர் கொலை தொடர்பில் விசாரணை செய்ய CID யிற்கு பதில் IGP பணிப்பு

காத்தான்குடியில் சரீஆ சட்டத்தின் கீழ் 20 பேர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் குறித்து உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
கடந்த ஜூலை 4 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார். காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரினால் மனித உரிமைகள் ஆணைகுழுவில் இந்த 20 பேரின் கொலை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அத்தனை ஆவணங்களும் தன்னிடம் உள்ளதாகவும் தேரர் கூறியிருந்தார்.
எந்தவொரு நேரத்திலும் பொலிஸில் அதனைச் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் தேரர் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்தே இந்த வேண்டுகோளை பதில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment