ஈரானால் சிறை பிடிக்கப்பட்ட கப்பலில் 18 இந்தியர்கள்

ஈரானால் சிறை பிடிக்கப்பட்டுள்ள பிரிட்டன் நாட்டு கப்பலில் இருக்கும் 18 இந்தியர்களை மீட்க, தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக ஈரான் மீது குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளுக்கும் ஈரானுக்கும் மோதல் வெடித்து பாரசீக வளைகுடாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் கப்பலை கிப்ரால்டார் என்ற இடத்தில் இங்கிலாந்து கடற்படை பறிமுதல் செய்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைப்பிடிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்து இருந்தது.இந்நிலையில், நேற்று பாரசீக வளைகுடாவில் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பல் ஸ்டெனா இம்பெரோ-வை ஈரான் கடற்படை சிறை பிடித்தது.ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், ஈரான் புரட்சிகர படையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறை பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலில் 18 இந்தியர்கள் உள்பட 23 பேர் உள்ளனர்.ஈரானின் இந்த செயலுக்கு இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜெர்மி ஹண்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேச கடல் விதிகளுக்கு உட்பட்டே கப்பல் பயணித்ததாகவும், இந்த பிரச்னையை ஈரான் விரைவில் முடிக்கவில்லை என்றால் கடும் விளைவுகள் சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.சிறைபிடிக்கபட்ட கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 18 பேர் உள்ளனர். இவர்களை மீட்க ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment