துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை பிடித்து விமானத்தில் ஏற்றி, இந்தியாவுக்கு அந்நாட்டு அரசு அனுப்பி வைத்தது.
இவர்கள் அனைவரையும் டெல்லியில் கைது செய்த என்ஐஏ, பூந்தமல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியது. இந்த 14 பேரையும் ஜுலை 25 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை துபாய் போலீசார் கடந்த வாரம் பிடித்தனர். இதையடுத்து இந்தியாவுக்கு அந்நாட்டு அரசு கடந்த வாரம் தனி விமானம் மூலம் அனுப்பிவைத்தது.
துபாயில் இருந்து டெல்லிக்கு வந்த 14 பேரையும் தேசிய புலனாய்வு அமைப்பு போலீசார் (என்ஐஏ) கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
0 comments:
Post a Comment