அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் 11 வயதே ஆன சிறுமி ரேசா லீல் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
லாஸ் ஏஞ்சலசில் ஸ்ட்ரீட் லீக் ஸ்கேட் போர்டிங் வேர்ல்ட் டூர் போட்டிகள் நடைபெற்றன. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பிரேசிலைச் சேர்ந்த 11 வயது சிறுமி பங்கேற்று முதலிடம் பிடித்தார்.
இந்தப் போட்டியில் மிக இளம் வயதில் முதலிடம் பிடித்தது ரேசா லீல் மட்டுமே. கடந்த முறை லண்டனில் நடந்த போட்டியில் லேசா மூன்றாம் இடம் பிடித்திருந்தார். அப்போது முதலிடம் பிடித்த பமேலா ரோசாவைப் பின்னுக்குத் தள்ளி இப்போது முதலிடம் பிடித்துள்ளார். 2020 டோக்யோ ஒலிம்பிக்கிற்காக ஆவலுடன் காத்திருப்பதாக ரேசா லீல் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment