தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஆயுதக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலில், 11 தற்கொலை குண்டுதாரர்கள் நடாத்த திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் திட்டத்துக்கு கல்முனை சியாம் மற்றும் நிஸான் ஆகியோரும் உதவி வழங்கியுள்ளதாகவும், கிழக்கு மாகாணத்திலுள்ள 5 வீடுகள் இதற்காக கூலிக்குப் பெற்றிருந்ததற்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் இன்றைய தேசிய சகோதர நாளிதழொன்று அறிவித்துள்ளது.
நீர்கொழும்பு வீடொன்றிலிருந்து லொறியொன்றில் சம்மாந்துரைக்கு வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அதனை எடுத்துச் செல்லப் பயன்படுத்திய லொறியின் சாரதி பிரசன்ன தெரிவித்துள்ளார்.
தங்க ஆபரணங்கள் சுத்திகரிக்க பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் எனத் தெரிவித்தே லொறியில் வெடிபொருட்கள் ஏற்றப்பட்டதாகவும் அந்த சாரதி சாட்சியம் அளித்துள்ளார்.
நீர்கொழும்பிலிருந்து சம்மாந்துரைக்கு அந்த லொறியில் வெடிபொருட்கள் அனுப்பிய சகலரும் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment