பாகிஸ்தானில் ரெயில்கள் மோதல்: 11 பயணிகள் பலி

பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு ஒரு சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் வந்த பயணிகள் ரெயில் தவறான டிராக்கில் சென்று சரக்கு ரெயில் மீது மோதியது.


இதில் பயணிகள் ரெயிலின் என்ஜின் பகுதியும் 3 பெட்டிகளும் அப்பளம் போல் நொறுங்கின. இந்த விபத்தில் ஒரு பெண், 8 ஆண்கள் உள்பட 11 பயணிகள் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.  போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.

ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இம்ரான்கான், அதிபர் ஆரிப் அல்வி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் ரெயில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவும் ரெயில்வே மந்திரிக்கு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment