சிங்கப்பூரில் 10 டன் எடையுள்ள யானை தந்தங்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல்

91 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தந்தங்களை சிங்கப்பூர் அரசு பறிமுதல் செய்துள்ளது. காங்கோவிலிருந்து வியட்நாம் நாட்டுக்கு சென்ற கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்திற்கு வந்தது. 
மேலும் அந்த கப்பலில் தங்கம் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து அப்போது மரப்பொருள் என்று பெயரிடப்பட்டிருந்த 3 கன்டைனர்களை அதிகாரிகள் திறந்து பார்த்த போது இரண்டில் சுமார் 10 டன் எடை கொண்ட யானை தந்தங்கள் இருந்தன. 
மேலும் இதை தொடர்ந்து அவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் 91 கோடி ரூபாய் ஆகும். இதனை அடுத்து 300 யானைகளை கொன்று தந்தங்களை வெட்டி எடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 
இதையடுத்து மற்றொரு கன்டைனரில் சுமார் 13 டன் எடை அளவிற்கு எறும்பு தின்னி விளக்கின் செதில்கள் இருந்தன. அதாவது சுமார் 8 ஆயிரம் விலங்குகளை கொன்று இந்த செதில்களை எடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 
இந்திய மதிப்புல் 252 கோடி ரூபாய் கொண்ட எறும்பு தின்னி செதில்களையும் மற்றும் யானை தந்தங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 மேலும் இதை தொடர்ந்து சிங்கப்பூர் சுங்கத்துறை வரலாற்றில் இவ்வளவு அதிக தந்தங்கள் பிடிபடுவது இதுவே முதல் முறையாகும். 
மேலும் தந்தங்கள் மற்றும் எறும்பு தின்னியின் செதில்களை மருந்திற்கும் மற்றும் அலங்கார பொருளாகவும் சீனாவில் பயன்படுத்துவதே அவற்றை கடத்த காரணம் என சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இதனை அடுத்து இந்த தந்தங்களுக்காக நாள் ஒன்றுக்கு 5 யானைகள் ஆப்பிரிக்காவில் கொல்லப்படுவதாக சர்வதேச வனவிலங்கு சங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment