பாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் சங்கார் மாவட்டத்தில் ரிக்ஷா ஒன்றுடன் பேருந்து ஒன்று மோதிக்கொண்டதனாலேயே நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 10 பேரே உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த 24 பேரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.
இதேவேளை, பாகிஸ்தானில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்ததுடன், 80 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment