ஸஹரான் உள்ளிட்ட தீவிரவாத குழுவினர் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் வைத்தே தீவிரவாதவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், ஸஹ்ரான் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் காத்தான்குடியை விட்டு வெளியேறியதிலிருந்து அங்கு அமைதியான சூழலே நிலவியதாகவும் அவர் கூறினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சாட்சியம் வழங்கியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
0 comments:
Post a Comment